இலக்கியவாதிகள்

                                           எழுத்தாளர் அகிலன்

   அகிலன் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். பல புகழ்பெற்ற
சரித்திர நாவல்கள் எழுதியிருக்கிறார். கரூரில் பிறந்த இவர்
வாழ்ந்தது புதுகையில்.
என் அம்மா வேலை பார்த்த பள்ளியில்
இவரது மகள் திருமதி.அங்கயற்கண்ணி அவர்கள்
ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.

தனது கதைகளுடன் தனது புகைப்படங்களை அவர்
வெளியிட்டதே இல்லை. தன் படைப்புகளால் தன்னை
மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றே விரும்பினார்.


அகிலன் என்கின்ற பெயரை உபயோகித்து வேறொருவர்
மீடியாக்களிடமிருந்தும், பத்திரிகைகளிலும் பணம்
பெருகிறார் அதை தடுக்க வேண்டும் என்பதற்காக
கலைமகள் நிறுவனத்தினரின் வேண்டுகோளுக்காக
தனது புகைப்படத்தை வெளியிட சம்மதித்தார்.



சித்திரப் பாவை 1975 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதை
இவருக்கு பெற்றுத்தந்தது. டீவியில் நாடகமாக
ஒளிபரப்பட்டது.

இவரது ஆக்கங்கள் பல இந்திய மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளது.                                        




                                            எழுத்தாளர் கந்தர்வன்

கந்தர்வன் (பிப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
               
     கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.

     தனது இறுதிகாலம் சென்னையில் இருந்து மறைந்தார். அவர் இறந்த பின்னர் அவரது உடல் புதுகை கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.



                                                கவிஞர்.தங்கம் மூர்த்தி 

கவிஞர்.தங்கம் மூர்த்தி  புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சிறந்த கவிஞராக வலம் வரும்  இவர் புதுக்கவிதை எழுதுவதில் வல்லவர்.


                               
இவர் தற்போது, சாகித்ய அகாடமியின், தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.


                                       எழுத்தாளர் புதுகை சஞ்சீவி

    புதுகை சஞ்சீவி தமிழகத்தில் சிறந்த இளம் எழுத்தாளர்களில் ஒருவர்.  புதுக்கோட்டையில் வசித்து வரும் இவரின் இயற் பெயர் எஸ்.சஞ்சீவி தாஸ் ஆகும். திரு.சூசை மாணிக்கம்-தங்கத்தம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மற்றும் கடைசி பிள்ளையாக பிறந்தவர்.

                                                

            ஆட்டோ ஓட்டுனராக பணிபுரியும் இவரின் சிறுகதைகள் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது. இவர் தினமணி-நெய்வேலி  புத்தக கண்காட்சி பரிசு, டி.வி.ஆர் சிறுகதை பரிசு, பெண்ணே நீ சிறுகதை போட்டி பரிசு உள்பட பல பரிசுகளை சிறந்த சிறுகதைகளுக்காக பெற்றிருக்கிறார்.
  
            இவரது வண்ணத்து பூச்சிகளும் கண்ணாடி அறைகளும் சிறுகதை தொகுப்பு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இவரது குருநாதர் கந்தர்வன் ஆவார்.

No comments:

Post a Comment