பி. யு. சின்னப்பா
புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

1916 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.
முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் சினிமாவில் பிரவேசித்தார் சின்னப்பா. அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப்பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து சுமார் 25 படங்களில் அவர் நடித்திருந்தார்.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 இல் தமது 35ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
தடகள வீராங்கனை சாந்தி
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் சவுந்தரராஜன் – மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகளாகப் பிறந்தவர் சாந்தி. குறுகிய ஓட்டு வீட்டில் வசித்து, கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர், ஆண் குழந்தை ஆர்வத்தில் அடுத்தடுத்து மூன்று மகள்களையும், அய்ந்தாவதாக ஒரு மகனையும் பெற்றனர். ஒரு வேளை பசியாற்றிய பழைய சோற்றை பங்கிட்டுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. கொஞ்சம் சோறும் நிறைய தண்ணீரும் கலந்து நீராகாரம்தான் சாந்தி அறிந்த ஒரே உணவு வகை! கத்தக்குறிச்சியின் தலித் குடியிருப்புகளில் வாழ்ந்த எல்லோருமே ஒருவேளை உணவிற்கு அல்லல்பட்டவர்கள்தான். அதுவும் கிடைக்காத நாட்களில், பகல் முழுவதும் பட்டினி கிடந்து விட்டு இரவு வேளையில், உயர்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குச் சென்று, வீட்டிற்கு வெளியே நின்று இறைஞ்சி கேட்டு உணவு வாங்கி வருவது வழக்கம். மிக நிச்சயமாக, அதுவும் பழைய சோறாகத்தான் இருக்கும்.
2005 டிசம்பரில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் புதுக்கோட்டைக்கும் பெருமை சேர்த்துள்ளார் இந்த சாதனைப் பெண்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
- புதுக்கோட்டையில் பிறந்த இவர் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்.
- மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம் என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற தமிழகப் பெண்மணி
- இந்திய அரசின் உதவித்தொகை பெற்று பிரிட்டனுக்கு சென்று, பெண்கள் - குழந்தைகளின் நோய் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் பெண்.
- தமிழக சட்டமன்றத்தில் துணைத்தலைவர் என்ற பதவியை எதிர்ப்பில்லாமல் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அகியவர்களுடன் இணைந்து இந்திய மகளிர் மன்றம் என்ற அமைப்பை பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவதற்காக துவங்கியவர்.
- பால்ய விவாகம் ஒழிய முக்கியக் காரணமாக இருந்தவர்.
- நகராட்சி,சட்டமன்றம்,சட்டமேலவை ஆகியவைகளில் பெண்களுக்கும் உரிமைவேண்டும் என்பற்கு எடுத்துக் காட்டாக இவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்.
- தேவதாசி முறைகள் இருக்கக் கூடாது பெண்கள் தன்மானத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
- அவ்வை பொதுநலப்பணி மருத்துவமணையை சென்னை அடையாறில் நிறுவியவர்.கிராம முன்னேற்றம், கிராம சுகாதாரம்,தண்ணீர்வசதி,கல்வி வசதி,நூலக வசதி ஆகியவைகளை அமைத்துத் தந்தவர்.
- அவ்வை இல்லம் உறுவாக்கியவர். இங்குள்ள பெண்கள் மருத்துவ மணைகளில் நர்ஸ்களாகவும்,சுகாதார மேற்பார்வையாளர்களாகவும்,கிராம சேவகிகளாகவும்,சுகாதார செவிலியராகவும்,பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உறுவாக்கப் பட்டுள்ளனர்.
- சென்னை புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தை நிறுவியவர்.
- மகாத்மா காந்தியினிடத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி 1945 ல் டாக்டர் ராமச்ச்சந்திரன் என்பவர் திண்டுக்கல் அருகே காந்திகிராமம் என்ற ஒரு கிராமம் அமைய பரிந்துரைச் செய்து , காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.
- காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து ஆங்கில கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட தனது சட்ட மன்ற மேலவை உறுப்பினர், துணைத்தலைவர்,பதவிகளை ராஜினாமா செய்தவர்.
- 1933ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
- “மிஸ்மேயோவின்” புத்தகக் குறிப்புகள் இந்திய மருத்துவமணை நோயாளிகள் பற்றிய குறிப்புத்தானே தவிர இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல::” என அமெரிக்காவிலே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர்.
- 1952 ல் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றபோது இவரை மீண்டும் மேலவை உறுப்பினராக கேட்டுக் கொண்டார்.அதைவிட முக்கியமானது புற்று நோய் மருத்துவ மணை அமைப்பது என்று சொல்லி மேலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தார்.
- மகாகவி பாரதியை நேரில் சந்தித்தவர்.பாரதியே இவரிடம் பெணுரிமை பற்றி அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்டிரிக்கையி எழுத கேட்டுக் கொண்டார்.
- “எனது சட்டமன்ற அனுபவங்கள்” என்ற நூலை எழுதியவர்.
- இவரது கணவர் திரு.சுந்தர ரெட்டி.இவரும் டாக்டர்.தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியாரின் தமக்கை மகன் இவர்.
No comments:
Post a Comment